ECONOMYNATIONALSELANGOR

எஸ்.ஒ.பி. பின்பற்றப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு, சாலைத் தடுப்புகள் அதிகரிப்பு

கோலாலம்பூர், மே 9– பொதுமக்கள் எஸ்.ஒ.பி விதிமுறைகளையும் எல்லை கடப்பதற்கான தடையையும் முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய காவல் துறையினர் மாநில, மாவட்ட எல்லைகளிலும் மக்கள் நெரிசல்மிக்க பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவுள்ளனர்.

நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு எதுவாக எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் சில மாநில போலீஸ் தலைவர்களும் போலீசாருடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட கோலாலம்பூரில் மாநில போலீசார் 1,200 போலீஸ்கார்களை உள்ளடக்கிய 91 எஸ்.ஒ.பி.கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர். இவர்கள் மாநகரின் நெரிசல்மிக்க பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வர்.

ஜொகூரில் பொதுமக்கள் தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், நோன்பு பெருநாளில் குடும்பத்தாரை காண சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்பதாகும்.

கடந்த ஏப்ரல் முதல் நேற்று வரை எல்லை கடப்பதற்கு 19,090 விண்ணப்பங்களை தாங்கள் பெற்றதாகவும் அவற்றில் 465 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஆயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

பினாங்கில் பொதுமுடக்கத்தை முன்னிட்டு  சாலைத் தடுப்புகளின் எண்ணிக்கை பதினைந்திலிருந்து 41ஆக அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

 

 


Pengarang :