ECONOMYSELANGOR

காஜாங்,சிலாங்கூர் கூ இடாமான் வீடமைப்புத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் பூர்த்தியாகும்

ஷா ஆலம், மே 11 காஜாங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிலாங்கூர் கூ இடாமான் வீடமைப்புத் திட்டம் இவ்வாண்டு இறுதியில் பூர்த்தியாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுமார் 1052 சதுரஅடி கொண்ட அந்த வீடுகளில் வீட்டுத் தளவாடங்கங்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு கூரையுடன் கூடிய இரு  கார் நிறுத்துமிடங்களையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இரண்டரை லட்சம் வெள்ளி மதிப்பிலான அந்த வீடுகள் சிலாங்கூர் மாநில மக்களுக்கான கட்டுபடி விலை வீட்டுடைமைத் திட்ட கடனுதவித் திட்டத்தையும் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மொத்தம் 42 திட்டங்கள் வாயிலாக 80,650 சிலாங்கூர் கூ இடாமான் மற்றும் சிலாங்கூர் ஹராப்பான் வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த வீடுகள் யாவும் இன்னும் நான்கு ஆண்டுகளில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றில் 77,000 வீடுகள் பொதுமக்களுக்கு விற்கப்படும் எஞ்சிய வீடுகள் வாடகை கொள்முதல் திட்ட அமலாக்கத்திற்காக மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும்.


Pengarang :