I
ANTARABANGSAECONOMYNATIONALSELANGOR

இலக்கவியல் வாய்ப்புகள் குறித்து சிலாங்கூர் அரசு- லஸடா பேச்சுவார்த்தை

ஷா ஆலம், மே 11- சிலாங்கூர் மாநிலத்தில் இலக்கவியல் தொழில்துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து மாநில அரசு மற்றும் லஸடா மலேசியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இயங்கலை வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சிலாங்கூர் மாநிலம் சார்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம்மும் லஸாடா சார்பில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மெக்னஸ் எக்போமும் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின் போது சிலாங்கூரில் இலக்கவியல் துறையில் முதலீடு செய்வது, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மத்தியில் இலக்கவியலை ஊக்குவிப்பது, மின் வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக சிடெக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் மற்றும் இலக்கவியல் பொருளாதார கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

சிடெக் தலைமை செயல்முறை அதிகாரி யோங் காய் பிங் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


Pengarang :