ANTARABANGSAHEALTHNATIONALPBTSELANGOR

இயங்கலை வாயிலாக கூட்டத் தொடரை நடத்துவதற்கு தயார் நிலையில் நாடாளுமன்றம்

கோலாலம்பூர், ஜூன் 24– அவசியம் ஏற்படும் பட்சத்தில் எந்நேரத்திலும் நாடாளுமன்றத்தை இயங்கலை வாயிலாக நடத்துவதற்கு ஏதுவாக  அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

தொழிநுட்ப பிரிவுக்கு தேவையான பொருள்களை தருவிப்பதற்கான நடவடிக்கையில் நாடாளுமன்றத் தரப்பு ஈடுபட்டுள்ளதாக மக்களை துணை சபாநாயகர் டத்தோ முகமது ரஷிட் ஹஸ்னோன் கூறினார்.

அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நாங்கள் முழு தயார் நிலையில் உள்ளோம். இயங்கலை வாயிலாக நடத்துவதற்கான கூடுதல் ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்றார்  அவர்.

நாடாளுமன்றம் கூடுவதற்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கு 28 நாட்களுக்கு முன்னர் அதன் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்று கூட்ட விதி கூறுகிறது என்றார்.

இயங்கலை வாயிலாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுவது புதிய அனுபவமாக விளங்கும் எனக் கூறிய  அவர், இத்தகைய கூட்டம் நாட்டில் புதிய வரலாறாகவும் அமையும் என்று டத்தோ முகமது ரஷிட் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காண்பதற்காக “ஒளித்திரைகள்“ முன் அமர்ந்திருப்பது மக்களவை சபாநாயகருக்கு புதிய சவாலாகவும் விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :