HEALTHMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசி பற்றாக்குறை- சிலாங்கூரில் சில தடுப்பூசி மையங்கள் தற்காலிமாக மூடப்படலாம்

ஷா ஆலம், ஜூன் 28- கோவிட்-19 தடுப்பூசிகள் உரிய நேரத்தில் வந்த சேராத பட்சத்தில் சிலாங்கூரில் உள்ள சில தடுப்பூசி செலுத்தும் மையங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழல் ஏற்படும் என்று சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

தற்போதைக்கு மாநில அரசின் வசம் 20,000 தடுப்பூசிகள் மட்டுமே  உள்ளதாவும் புதிதாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்படாவிட்டால் இன்று சில தடுப்பூசி செலுத்தும் மையங்களை மூட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பூசி பணிக்குழுவின் கீழுள்ள தடுப்பூசி மையங்கள் 87,616 தடுப்பூசிகளை செலுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது தினசரி 50,000 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும் 20,00 டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. எனினும், தற்போது  நம்மிடம் 20,000 தடுப்பூசிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. தடுப்பூசிகள் இன்று வந்து சேராவிட்டால் சில தடுப்பூசி செலுத்தும் மையங்களை மூடித்தான் ஆக வேண்டும் என்றார் அவர்.

தடுப்பூசி விநியோகம் தொடர்பில் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த தகவலுக்கு பதிலடியாக சித்தி மரியா இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியிருந்தார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கான தடுப்பூசி விநியோகம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 20 விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று கைரி கூறியிருந்தார்.

தடுப்பூசி செலுத்தும் ஆற்றலைப் பொறுத்த வரை சிலாங்கூர் சில பிரச்னைகளை எதிர்நோக்குகிறது. நாளொன்றுக்கு 20,000 தடுப்பூசிகளை செலுத்தும் ஆற்றலை அது கொண்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் சிலாங்கூர் அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக நான் அம்மாநிலத்திற்கு செல்ல வேண்டி வந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 


Pengarang :