ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 எண்ணிக்கை 7,654 ஆக திடீர் உயர்வு- சிலாங்கூரில் 3,260 நேர்வுகள் பதிவு

ஷா ஆலம், ஜூலை 6- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று 7,654 ஆக திடீர் உயர் கண்டது. இது, நேற்றை விட 1,609 சம்பவங்கள் அதிகமாகும்.

கடந்த ஒரு மாத காலத்தில் பதிவான மிக அதிகப் பட்ச கோவிட்-19  எண்ணிக்கை இதுவாகும். கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி 7,748 சம்பவங்கள் நாட்டில் பதிவாகின.

சிலாங்கூரில் நேற்றை விட இன்று 998 சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் வழி மாநிலத்தில்  அந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,260 ஆகி ஆகியுள்ளது.

அதே சமயம், கோலாலம்பூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்ந்து 1,550 ஆகி பதிவாகியுள்ளது. நெகிரி செம்பிலானில் 698 பேரும் கெடாவில் 337 பேரும் சரவாவில் 286 பேரும் மலாக்காவில் 230 பேரும் சபாவில் 225 பேரும் பினாங்கில் 185 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகாங் (180), கிளந்தான் (118), பேராக் (94), லபுவான் (82), திரங்கானு (61), புத்ரா ஜெயா (33), பெர்லிஸ் (2) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலையில் உள்ளன.


Pengarang :