ALAM SEKITAR & CUACASELANGOR

கோல லங்காட் உத்தாரா வனப்பகுதியை பாதுகாக்கும் முயற்சிக்கு மத்திய அரசு உதவி

புத்ரா ஜெயா, செப் 15- கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை பாதுகாக்கும் முயற்சிக்கு எரிசக்தி மற்றும் நீர் வளத்துறை அமைச்சு உதவும் என்றம அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹசான் கூறினார்.

அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் 536.7 ஹெக்டர் நிலப்பரப்பில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக நிலத் தகுதியை மாற்றுவதற்கு செய்யப்பட்ட முடிவை ரத்து செய்த மாநில அரசின் நடவடிக்கையை அமைச்சு பாராட்டுவதாக அவர் சொன்னார்.

அதே சமயம் , அந்த பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கான அந்தஸ்தை மீண்டும் ஏற்படுத்தி அதனைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று என்றும் அவர் கூறினார்.

அந்த பகுதியை தொடர்ந்து பாதுகாப்பதற்கும் புத்துயிரூட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தீபகற்ப மலேசிய காட்டுவள இலாகா மற்றும் கனிம வளம் மற்றும் அறிவியல்புவியியல் துறை ஆகியவற்றை தாம் பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோல லங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒரு சதுப்பு நிலக்காடாகும் எனக் கூறிய அவர், இங்கு தீச்சம்பவங்களை கட்டுப்படுத்துவதும் சூழியலைப் பாதுகாப்பதும் அவசியமான ஒன்றாகும் என்றார்.

அந்த பாதுகாக்கப்பட்ட பகுதியின் 536.7 ஹெக்டரில் 42 ஹெக்டர் நீங்கலாக மற்ற பகுதிகள் மீண்டும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆர்ஜிதம் செய்யப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 8 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

 


Pengarang :