ECONOMYSELANGOR

தற்காலிக லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்வீர்- தாமான் டெம்ப்ளர் தொகுதி சிறு வணிகர்களுக்கு கோரிக்கை

செலாயாங், செப் 22- வர்த்தக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக செலாயாங் நகராண்மைக் கழகத்திடம் தற்காலிக லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்யும்படி தாமான் டெம்ப்ளர் தொகுதியிலுள்ள சிறு வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

லைசென்ஸ் விண்ணப்பங்கள் எளிதாக்கப்படவுள்ளதோடு அங்கீகாரத்திற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

தற்போது பெரும் எண்ணிக்கையிலான வணிகர்கள் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வர்த்தகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்கள் இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்  வலியுறுத்தினார்.

வர்த்தக லைசென்ஸ் முக்கிய ஆவணமாக விளங்குவதால் இன்னும் லைசென்ஸ் பெறாத வணிகர்கள் விரைந்து விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். லைசென்ஸ் இன்றி செயல்படும் பட்சத்தில் அமலாக்க அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படுவதற்கும் வியாபாரப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் சாத்தியம் உள்ளது என்றார் அவர்.

ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமையில் தாமான் செலாயாங் முத்தியாரா மற்றும் கம்போங் செலாயாங் இண்டாவைச் சேர்ந்த 17 அங்காடி வியாபாரிகளுக்கு தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :