ECONOMYSELANGOR

இறக்கம் காண்கிறது கோழி விலை

புத்ரா ஜெயா, செப் 22-  நாட்டில் கோழியின் விலை கடந்த வாரத்தைக் காட்டிலும் தற்போது இறங்கு முகமாக உள்ளதை உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு வெ.11.00 முதல் வெ.11.50 வரை இருந்த கோழியின் விலை தற்போது வெ.8.79 ஆக குறைந்துள்ளதாக அமைச்சின் அமலாக்கத் துறை இயக்குனர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

நேற்று முன்தினம் தொடங்கி 600 கோழி விற்பனை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 11 மையங்கள் மட்டுமே 10 வெள்ளிக்கும் அதிகமான விலையில் கோழியை விற்றது கண்டு பிடிக்கப்பட்டது. 147 மையங்கள் 9.50 வெள்ளிக்கும் கூடுதலான விலையிலும் 339 மையங்கள் 9.50 வெள்ளிக்கும் குறைவாகவும் 108 மையங்கள் 8.00 வெள்ளிக்கும் குறைவாகவும் விற்றது கண்டு பிடிக்கப்பட்டது என்றார்.

கோழி விநியோகத்தில் தொடர்புடைய சில்லறை, மொத்த வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் அணுக்கமான ஒத்துழைப்புடன் அமைச்சின் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக இந்த விலை குறைப்பு சாத்தியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோழியின் விலை தொடர்ந்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக சோதனை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

Pengarang :