ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எதிர்க்கட்சித் தலைவருக்கான மேற்படி வசதிகளுக்கான நிதியை மக்கள் நலனுக்கு செலவிடுங்கள்

ஷா ஆலம், அக்டோபர் 17: டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவராக சில வசதிகளை மேம்படுத்த அவருக்கு அரசு வழங்கிய ஒதுக்கீடுகளை, மக்கள் நலன் திட்டங்களுக்கு  திருப்பி விட கோரினார்.  

தனது பேஸ்புக் மூலம், ஒரு அமைச்சருக்கு இணையான வேறு சில வசதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.நாடு மிக முக்கியமான பொருளாதார மற்றும் நோய்த்தொற்று ஆபத்திலிருக்கும் பொழுது மக்கள் நலனை பகடையாக்க எவரையும் அனுமதிக்க கூடாது என்ற அடிப்படையில் 'அரசாங்கத்திற்கும் பக்காத்தான் ஹரப்பானுக்கும் (HARAPAN) இடையே' மாற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒரு வழிகாட்டல் கையெழுத்திடப்பட்டது. 

இந்த அங்கீகாரம் என்பது எந்தவொரு அரசாங்கக் கொள்கையையும் கேள்வி இல்லாமல் ஆதரிக்கும் என்று அர்த்தமல்ல என்று தெரிவித்தார். கடிதத்தில் பிரதமர் கூறியபடி இந்த முடிவு எதிர்க் கட்சித் தலைவரின் பங்கை பாதிக்காது, நான் வழக்கம் போல் எனது கடமைகளை தொடர்ந்து செய்வேன்.

"நாடு ஜனநாயகத்தின் பாதையில் இருப்பதை உறுதி செய்வதற்காக சோதனை மற்றும் சமநிலை அம்சம் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்," என்று அவர் கூறினார். 

நாடாளுமன்றத்தில் அன்வாருக்கான அலுவலகத்தில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது மற்றும் கூடுதல் ஒதுக்கீடுகளை கூட மக்கள் நலன் திட்டங்களுக்கு வழங்க வேண்டி கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், ஒரு அமைச்சர் அலுவலகத்திற்கு இணையான வசதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நிலையை மேம்படுத்த அன்வாருக்கு உறுதி கடிதத்தை வழங்கியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 13 அன்று, மத்திய அரசும் ஹராபனும் மலேசிய குடும்பத்தின் உணர்வை உயர்த்துவதன் மூலம் இருதரப்பு கூட்டாட்சியை உருவாக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தேசிய வரலாற்றை உருவாக்கியது.

அரசாங்கத்திற்கும் பக்காத்தான் ஹரப்பானுக்கும் (HARAPAN) இடையே மாற்றம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன் இந்த கடிதம் வழங்கப்பட்டது.

கோவிட் -19 திட்டத்தை வலுப்படுத்துதல், நிர்வாக மாற்றம், பாராளுமன்ற சீர்திருத்தம், நீதித்துறையின் சுதந்திரம், 1963 மலேசியா ஒப்பந்தம் (எம்ஏ63) மற்றும் ஒரு வழி நடத்தல் குழுவை உருவாக்குதல் ஆகிய ஆறு நிகழ்ச்சி நிரல்களை அடிப்படையாகக் கொண்டது.

Pengarang :