ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர சிலாங்கூர் பேராக்குடன் இணைந்து செயல்படும்

பந்திங், அக்டோபர் 17: அடுத்த ஆண்டு மாநிலத்திற்கு வரும் ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய சிலாங்கூர் பேராக்குடன் இணைந்து செயல்படும்.

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் சிலாங்கூர் இயக்குனர் (மோடாக்) இந்த ஒத்துழைப்பு மாநில மக்களின் வசதிக்காக தரவு, யோசனைகள், விளம்பரப் பொருட்கள் மற்றும் சுற்றுலா விளம்பர பலகைகளை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

சையத் முகமட் ஃபரிஸ் சையத் மன்சோர், கூட்டாண்மை பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டுள்ளது என்று விளக்கினார், இது இம்மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள பேராக்கை, கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு காரணம்  பல வழிகளில் இரண்டு மாநிலங்களுக்கும் இதனால் பயனடையும், சுற்றுலாத்துறையை மேப்படுத்துவது மற்றும் போக்குவரத்து வசதிகளையும் கருத்தில் கொண்டால் மிக இலகுவானது.

சிலாங்கூரின் சுற்றுலா மையங்களை விளம்பரப்படுத்த நாங்கள் இந்த ஆண்டு அம்மாநிலத்திற்கு செல்வோம், அதன் பிறகு பேராக் மாநிலத்திலிருந்தும்  இங்கு வருகை புரிவர். நமது இலக்கை அடைய நாங்கள் பேராக் சுற்றுலா துறையுடன்,  இணைந்து வேலை செய்ய விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார்.

இன்று உலக உணவு தினமான 2021 உடன் இணைந்து MyKampung @ Homestay Kampung Sungai Lang Tengah   என்ற (எனதுகம்பம்@சுங்கைலாங்தெங்கா கம்பம்குடியிருப்பு) நிகழ்ச்சியில் வருகை தந்த போது ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனை கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த மொஹமட் ஃபரிஸ், சிலாங்கூரில் உள்ள பெரும்பாலான டூர் ஆபரேட்டர்கள் இந்த மாத தொடக்கத்தில் இந்த துறை செயல்பட அனுமதிக்க பட்டதிலிருந்து,  நடமாட்ட கட்டுப்பாடு நடைமுறைகளுக்கு (SOP) இணங்கி செயல்படுவதாக கூறினார்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) மற்றும் உள்ளூர் ஊராட்ச்சி மன்ற அதிகாரிகள் (பிபிடி) கூட்டு கண்காணிப்பு அவ்வப்போது SOP களை மீறாமல் இருப்பதை மறு உறுதி செய்யும். 2021 ஆம் ஆண்டில் மீதமுள்ள மூன்று மாதங்களில் இரண்டு மில்லியன் தனிநபர்கள் சிலாங்கூருக்குச் வருகைப் புரிவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

அக்டோபர் 11 தொடங்கி, வயது வந்தோர் தடுப்பூசி விகிதம் 90 சதவிகிதத்தை அடைந்த பிறகு, தடுப்பூசி  டோஸ்களை முடித்த நாட்டின் குடிமக்கள் மாநிலம் கடந்து செல்ல அரசாங்கம் அனுமதிக்கின்றது என்றார்.இந்த அனுமதி மக்கள் சுதந்திரமாக கிராமத்திற்குத் திரும்பி தங்கள் பெற்றோரைச் சந்திப்பது, பயணம் செய்வது போன்றவற்றை அனுமதிக்கிறது.


Pengarang :