ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மீடியா சிலாங்கூர் பணியாளர்களுக்கு கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகள் விநியோகம்

ஷா ஆலம், அக் 20- மீடியா சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் நிருபர்கள், புகைப்படக்காரர்கள் உள்பட தனது அனைத்து 102 பணியாளர்களுக்கும்  கோவிட்-19 சுயப் பரிசோதனைக் கருவிகளை வழங்கியது.

மேலும், அவர்களுக்கு ஆக்சிமீட்டர் எனப்படும் உடலில் ஆக்சிஜன் அளவைக் கணக்கிடும் கருவியும் வழங்கப்பட்டதாக மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமது பாரிட் முகமது அஸ்ரி கூறினார்.

ஒவ்வொரு பணியாளருக்கும் ஐந்து சுயப் பரிசோதனை கருவிகளும் ஒரு ஆக்சிமீட்டரும் வழங்கப்பட்டன. நாடு பெண்டமிக் கட்டத்திற்கு மாறும் நிலையில் இவ்விரு உபகரணங்களும் நமக்கும் மிகவும் அத்தியாவசியமானவையாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

பணியாளர்களின் நலனைக் காப்பதில் நிறுவனம் கொண்டுள்ள கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முகக் கவசம், கிருமி நாசினி வாங்குவது மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது போன்ற நோக்கங்களுக்காக கூடுதல் பட்சம் 200 வெள்ளி வரை நிர்வாகத்திடமிருந்து பெறுவதற்கு மீடியா சிலாங்கூர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

 


Pengarang :