ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர பட்ஜெட்டில் வெ  400 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 30-  கோவிட் -19 நோய்த் தொற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 400 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த தொகையில் 200 கோடி வெள்ளி தடுப்பூசித் திட்டத்திற்காகவும் மேலும் 200 கோடி வெள்ளி மருத்துவமனைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் துங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் துங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவிட்-19 உள்பட பல்வேறு பல்வேறு நோய்களுக்கு பயன்படும் மருந்துகளைத் தருவிப்பதற்கும் இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

பெரியவர்களுக்கு மூன்றாவது மற்றும் ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கும் 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கானத் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்வதற்கும்  ஏதுவாக  தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்  செய்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 


Pengarang :