MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் : 57 பேருக்கு உயரிய விருதுகள்- டாக்டர் சுரேஷ் குமார் டத்தோ விருது பெற்றார்

கிள்ளான், நவ 27- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு 57 பேருக்கு உயரிய விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன.

இந்த விருதளிப்பு நிகழ்வு இன்று காலை இங்குள்ள இஸ்தானா ஆலம்ஷா பாலாய்ரோங் ஸ்ரீயில் நடைபெற்றது.

விருது பெறுவோர் பட்டியலில் சிலாங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினர் ராஜா டான்ஸ்ரீ அர்ஷாட் துன் ஊடா முதலிடம் வகிக்கிறார். அவருக்கு டி.கே. 11 எனப்படும் டர்ஜா கெராபாட் சிலாங்கூர் விருது வழங்கப்பட்டது.

சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் தரைப்படை தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ ஜம்ரோஸ் முகமது ஜைன் ஆகியோர் டத்தோ ஸ்ரீ அந்தஸ்தை தாங்கி வரும் ஸ்ரீ படுகா மக்கோத்தா சிலாங்கூர் விருதை (எஸ்.பி.எம்.எஸ்.) பெற்றனர்.

டத்தோ செத்தியா அந்தஸ்து கொண்ட  டத்தோ செத்தியா-சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (எஸ்.எஸ்.ஐ.எஸ்.) விருது மலேசியத் கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் ஹபிபா அப்து ரஹிம் மற்றும் மலேசிய ஷரியா நீதித்துறை தலைமை இயக்குநர்/ தலைமை ஷரியா நீதிபதி டத்தோ டாக்டர் முகமது நாய்ம் மொத்தார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

டத்தோ அந்தஸ்தை தாங்கி வரும் டி.பி.எம்.எஸ். எனப்படும் படுகா மக்கோத்தா சிலாங்கூர் விருதை 10 பேர் பெற்றனர். 

டி.எஸ்.ஐ.எஸ். அந்தஸ்து கொண்ட டர்ஜா கெபெசாரான் டத்தோ டத்தோ-சுல்தான் ஷராபுடின் விருதை சுங்கை பூலோ மருத்துவமனையின் பொது மருத்துவம் மற்றும் நிபுணத்துவ ஆலோசக சேவைத் துறையின் தலைவர் டாக்டர் சி. சுரேஷ் குமார் உள்பட 16 பேர் பெற்றனர்.

இந்நிகழ்வில் மேலும் 26 பேருக்கு எம்.எம்.எஸ். எனப்டும் டர்ஜா கெபெசாரான் செத்திய மக்கோத்தா விருது வழங்கப்பட்டது.


Pengarang :