ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

துப்புரவுப் பணியில்  ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் மந்திரி புசார் நன்றி தெரிவித்துக் கொண்டார்

ஷா ஆலம், ஜன 9- அண்மையில் ஏற்பட்ட வரலாறு காரணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மாநில மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள், கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட் அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் பணி நேற்று முடிவுக்கு வந்தது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் துப்புரவுப் பணி நேற்று காலை 8.00 மணியுடன் முடிவுக்கு வந்ததாக மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது.

கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை தமது தரப்பு 48,589.95 டன் குப்பைகளை அகற்றியுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது.


Pengarang :