ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு பெர்மாதாங் சட்டமன்றத்தில் 500 ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப்ரல் 7: பெர்மாதாங் சட்டமன்றம் ஹரி ராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தம் 500 ஜோம் ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு அடுத்த வாரம் விநியோகிக்கும்.

100 ரிங்கிட் மதிப்பிலான பற்றுச் சீட்டுகள் குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் மற்றும் இதுவரை எந்த உதவியையும் பெறாத நபர்களுக்கு வழங்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“சிலாங்கூர் மாநிலப் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்) மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டங்களில் (எஸ்.எம்.யு.இ.) பயன்பெறாதவர்கள் இத்திட்டத்திற்கு  விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு கிராமத் தலைவர்கள் மூலம் இந்த பற்றுச் சீட்டுகள் விநியோகிக்கப்படும்.

“உண்மையில், இந்த உதவி விரைவில் ஹரி ராயா பெருநாளை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் பெறுநர்களின் சுமையை ஓரளவு குறைக்கலாம். ஏப்ரல் 16 முதல் பாசீர் பெனாம்பாங் பெஸ்ட் மார்ட் பேரங்காடியில் பற்றுச் சீட்டுகளை வைத்து பொருட்கள் வாங்கலாம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி, ஹரி ராயாவுக்குத் தயாராக சில குழுக்களுக்கு உதவுவதற்காக ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் மூலம் இந்த ஆண்டு RM20 லட்சத்துக்கும் அதிகமாக விநியோகிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒரு நீண்ட கால முயற்சியாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இனம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களின் முக்கிய கூறுகளுக்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் உள்ள சமூக சேவை மையங்கள் மூலம் உதவி வழங்கப்படுகிறது.

 


Pengarang :