ECONOMYHEALTHSELANGOR

கம்போங் துங்கு தொகுதியில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நடத்தப்படாது

பெட்டாலிங் ஜெயா, மே 9- கம்போங் துங்கு சட்டமன்ற தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வு இவ்வாண்டு நடத்தப்படாது என்று தொகுதி உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

மக்கள் மத்தியில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

எண்டமிக் கட்டத்தில் நாடு நுழைந்துள்ள போதிலும் நாங்கள் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்த மாட்டோம். கோவிட்-19 பெருந்தொற்றின் ஆபத்து இன்னும் உள்ளதோடு அந்நோயினால் ஏற்படும் பாதிப்பு ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் என்பதால் இவ்விஷயத்தில் அலட்சியமாக இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும், பள்ளிவாசல்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிகள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், கும்போல் ரைட் எனும் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் மின் அழைப்பு வாடகை வேன் சேவையை தொடக்கி வைத்தார்.


Pengarang :