ECONOMYSELANGOR

சிலாங்கூரில் அத்தியாவசியப் பொருள் விலையேற்றம் இல்லை -ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலம், மே 12- சிலாங்கூரில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் உள்ளதாக பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு இடங்களில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு மேற்கொண்ட  சோதனையில் இது தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

ஷா ஆலம், செக்சன் 6, மார்க்கெட், ஷா ஆலம் செக்சன் 16 மார்க்கெட், சுபாங் ஜெயா, எஸ்.எஸ்.15 மார்க்கெட், மேரு மார்க்கெட் ஆகியவையே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த நான்கு இடங்களாகும் என்று அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு மேற்கொண்ட சோதனை மற்றும் கண்காணிப்பில் வணிகர்கள் பொருள்களின் விலையை உயர்த்தவில்லை என்பது தெரியவந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், 2022 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட  விலை உச்சவரம்பு  திட்டத்தை மீறும் வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் தொடர்பில் பொது மக்களிடமிருந்து இதுவரை எந்தப் புகாரும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

முறைகேடாக நடக்கும் வணிகர்கள் குறித்த தகவல்களை கீழ்க்கண்ட வழிகளில் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் சொன்னார்.

• WhatsApp 019-279 4317
• Portal e-aduan.kpdnhep.gov.my
• Call Centre 1-800-886-800
• Emel [email protected]
• Ez ADU KPDNHEP
• Bilik Gerakan KPDNHEP Selangor 03-5514 4393/ 5518 1810/ 5512 5485


Pengarang :