ECONOMYHEALTHNATIONAL

பெக்ஸ்லோவிட் மருந்து விநியோகம் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு விரிவுபடுத்தப்படும்

புத்ரா ஜெயா, மே 18– நோய் எதிர்ப்பு மருந்தான  பெக்ஸ்லோவிட் விநியோகம் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பயிற்சி மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

இதற்கு முன்னர் அந்த மருந்து அரசாங்க மருத்துவமனைகளில் மட்டும் விநியோகிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இந்த பெக்ஸ்லோவிட் மருந்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக அதனை தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் பயிற்சி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள சுகாதார அமைச்சில் நோன்புப் பெருநாள்  கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மருந்து வழங்கப்பட்ட அனைத்து 405 கோவிட்-19 நோயாளிகளும் அந்நோய்த் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்து விட்டதாக அவர் சொன்னார்.

நோய்த் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படுகிறது. இந்த மருந்தைப் பெறும் தரப்பினரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குரிய சாத்தியம் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெக்ஸ்லோவிட் மருந்து வழங்கப்பட்ட அனைத்து 173 கோவிட்-19 நோயாளிகளும் முற்றாக குணமடைந்து விட்டதாகவும் கடந்த மே 9 ஆம் தேதி வரை அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும் கைரி கடந்த 12 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :