ECONOMYNATIONAL

நாட்டின் கோதுமை மாவு விநியோகம் பாதிக்கப்படாது என்று KPDNHEP உத்தரவாதம் அளிக்கிறது

கோலாலம்பூர், மே 18: வெப்பமான காலநிலை காரணமாக ஏற்படும் வெப்ப அலைகளைத் தொடர்ந்து கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தாலும், நாட்டின் கோதுமை மாவு விநியோகம் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் (KPDNHEP) கூற்றுப்படி, மலேசியா ஆஸ்திரேலியாவிலிருந்து 80 விழுக்காடு கோதுமையை இறக்குமதி செய்கிறது, மீதமுள்ளவை அமெரிக்கா, கனடா மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்கிறது.

இவ்வேளையில், நாட்டில் உணவுப் பொருளின் கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிச் செய்ய, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் 2,200 அமலாக்க அதிகாரிகள் எப்போதும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை அவ்வமைச்சு சுட்டிக் காட்டியது.

சமீபத்திய ஊடக அறிக்கைகள் இந்த ஆண்டு இந்தியாவின் கோதுமை உற்பத்தி வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகப் பொருட்களின் விலை உயர்வால் நாடும் அதிகரித்து வரும் உணவுப் பணவீக்கத்தை எதிர் கொள்வதாகவும் கூறுகின்றன.


Pengarang :