ECONOMYSELANGOR

தொழு உரத் தயாரிப்புக்கு உணவுக் கழிவுகளை சேகரிக்கும் திட்டம்- எம்.பி.எஸ்.ஏ.அமல்

ஷா ஆலம்,மே 27- உணவுக் கழிவுகளைக் கொண்டு தொழு உரத்தைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஷா ஆலம் மாநகர் மன்றம் ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வீடுகளில் சேரும் உணவுக் கழிவுகளை பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் உணவுக் கழிவு சேகரிப்பு சாவடிகளை மாநகர் மன்றம் ஏற்பாடு செய்கிறது.

சேகரிக்கப்படும் இந்த உணவுக் கழிவுகள் பதனீட்டு மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு தொழு உரமாக மாற்றப்படும் என்று மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

செக்சன் யு13 இல் உள்ள மறுசுழற்சி மையம், சுபாங் பண்டார் பிங்கிரான், சென்சன் யு5, செத்தியா ஆலம், யு2, சவுஜானா இண்டா தொழில்பேட்டை ஆகிய இடங்களில் இந்த உணவுக் கழிவு சேகரிப்பு சாவடிகள் அமைக்கப்படும் என அது தெரிவித்தது.

இந்த சாவடியில் மீந்து போன உணவுகள், கோழி மற்றும் மீன் எலும்புகள், முட்டைத் தோல், டுரியான் தவிர்த்து இதர காய்கறிகள் மற்றும் பழங்கள், தேங்காய் போன்றவை சேகரிக்கப்படும். உணவுப் பொட்டலங்கள் மற்றும் பானங்கள் இதில் அனுமதிக்கப்படாது என மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நோன்புப் பெருநாளின் போது ரமலான் சந்தைகளில் மீந்து போன உணவுகள் மற்றும் உணவுக் கழிவுகளைச் சேகரிக்கும் திட்டத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொண்டது.


Pengarang :