ECONOMYHEALTHSELANGOR

கோல சிலாங்கூரில் ஜூலை 2 ஆம் தேதி இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், ஜூன் 30- வரும் சனிக்கிழமை கோல சிலாங்கூர் அரங்கில் நடைபெறவிருக்கும் ஜெலாஜா சிலாங்கூர்  பென்யாயாங் பயணத் தொடரின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநில அரசினால் இலவசமாக நடத்தப்படும் இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் பொதுவான மருத்துவச் சோதனை, இரத்த, நீரிழிவு மற்றும் கண் பரிசோதனை, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், புரேஸ்டேட் புற்று நோய், பெருங்குடல் புற்றுநோய் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

சுமார் 34 லட்சம்  வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் மூலம் சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோய்ப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்கள் இந்த பரிசோதனையில் பங்கு கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலான இந்த நிகழ்வில் கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள், இரத்த தான முகாம் போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, சிலாங்கூர் வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் சிலாங்கூர் சிறு தொழில்முனைவோர் உதவித் திட்ட பயனாளிகளுக்கு உதவி வழங்கும் அங்கமும் இதில் இடம் பெறும்.


Pengarang :