ECONOMYNATIONALTOURISM

கைவிடப்பட்ட ஈயக்கப்பலை ஒரு கண்காட்சியாக மாற்ற முதலில் அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.  

ஷா ஆலம், ஆகஸ்ட் 8: இங்கு அருகில் உள்ள டிங்கில், சிப்பாங்கில் உள்ள கைவிடப்பட்ட ஈயக்கப்பலை வரலாற்று கண்காட்சியாக மாற்றும் முன் பழுது பார்க்கப்படுகிறது என்று கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் பல பாகங்கள் சிதிலடைந்துள்ளதாகவும், பழுது பார்க்கும் பணிகள் தேவைப்படுவதாகவும் போர்ஹான் அமான் ஷா கூறினார்.

“ஏற்கனவே துருப்பிடித்து சேதமுற்ற இடத்தில் சில பாகங்களில் சிறு பிரச்சனை உள்ளது. அதை மிதக்க விடும் முயற்சிகளுக்கு அத்தகைய செயல்முறை தேவை என்று சிப்பாங் நகராட்சி மன்றத்தின் (எம்.பி.சிப்பாங்) தலைவரால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அதே நேரத்தில், யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகளின் கலாச்சார மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்) அங்கீகாரத்தைப் பெறுவதற்கான ஆய்வை நடத்த ஊராட்சி மன்றங்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :