ECONOMYNATIONALSUKANKINI

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இரு சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு வெகுமதி

ஷா ஆலம், ஆக 9- பர்மிங்காம் காமன்வெல்த் 2022 போட்டியில் பதக்கம் வென்ற இரு சிலாங்கூர் ஆட்டக்காரர்களுக்கு சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் வெகுமதி வழங்கும்.

மகளிர் கலப்பு இரட்டையர் பூப்பந்து போட்டியில் எம்.தீனா இரு தங்கப் பதக்கங்களை வென்ற வேளையில் பிங்பாங் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை சோங் ஜெவன் பெற்றார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் இது குறித்து விவாதிக்கப்பட்டப் பின்னர் அந்த விளையாட்டாளர்களுக்கு வெகுமதி வழங்கும் நிகழ்வு நடத்தப்படும் என்று மாநில விளையாட்டு மன்றத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமது நிஸாம் கூறினார்.

கடும் முயற்சியின் பலனாக காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற அவ்விரு விளையாட்டாளர்களைப் பாராட்டும் வகையில் இந்த வெகுமதி வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்றாம் தேதி நடைபெற்ற பூப்பந்து இறுதியாட்டத்தில் தீனா-பியெர்ல் டான் ஜோடி, இந்தியாவின் திரேசா ஜோலி- காயத்திரி கோபிசந்த் இணையை 21-18, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றது.

இதனிடையே, பிங்பாங் போட்டியில் இந்தியாவின் சத்தியன் குணசேகரன்- மணிக்கா பத்ரா ஜோடியை தோற்கடித்த சோங் ஜேவன்- கேரன் லின் இணையினர் இறுதியாட்டத்தில் இந்தியாவின் சரத் கமால் அச்சந்தா- ஸ்ரீஜா அகுலா ஜோடியிடம் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.


Pengarang :