ECONOMYNATIONALPENDIDIKAN

எம்40 (எம்1) தரப்பினருக்கான பி.டி.பி.டி.என். கடனுதவி 100 விழுக்காடாக அதிகரிப்பு- பிரதமர் தகவல்

கோலாலம்பூர், செப் 15- தேசிய உயர் கல்விக் கடனுதவிக் கழகத்தின் (பி.டி.பி.டி.என்) வாயிலாக எம்40 (எம்.1) தரப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுதவி 75 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக உயர்த்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார்.

இது தவிர, பி.டி.பி.டி.என்.னில் கல்விக் கடனுதவி பெற்றுள்ள  எம்40 தரப்பு மாணவர்கள் மடிக்கணினி வாங்குவதற்கு கடன் பெறுவதற்கும் அனுமதி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

நம்புங்கள், மாணவர்கள் நலனில் அரசாங்கம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. அத்தரப்பினருக்கு பயனளிக்கக் கூடிய மேலும் பல திட்டங்களை விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்று அவர்  கூறினார்.

மலேசிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செமராக் பேட்ரியோட்டிக் ஐ.பி.டி.2022 நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :