ANTARABANGSAECONOMYSELANGOR

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அறிமுகப்படுத்த தொடக்க நிறுவனங்களுக்கு மாநில அரசு ஊக்குவிப்பு

கோலாலம்பூர், அக் 7- கார்பன் எனப்படும் கரியமிலவாயுவின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எதுவாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை தொடக்க நிறுவனங்களுக்கு மாநில அரச வழங்கும்.

எஸ்.ஏ.பி. எனப்படும் சிலாங்கூர் உந்துதல் திட்டத்தின் வாயிலாக சீடேக் எனப்படும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் பொருளாதார கழகம் இந்த பயிற்சிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கும் என்று மந்திரி புசார் கூறினார்.
தொடக்க நிறுவனங்களின் துரித வளர்ச்சிக்காக பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் 3 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் வாயிலாக மக்கள் கார்பன் வெளியேற்றக் குறைப்பு, குறைவான் மின் கட்டணம் போன்ற அனுகூலங்களை பெற முடியும் என்பதோடு எரிபொருளுக்கான உதவித் தொகையையும் குறைக்க முடியும் என்று அவர் சொன்னார்.

கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில்  நடைபெறும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் விவேக நகர மற்றும் இலக்கவியல் பொருளதார மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :