ECONOMYSELANGOR

நாளை மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், 15 அக்: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள மலிவான அடிப்படைப் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒன்பது இடங்களில் தொடர்கிறது.

ஜெலாஜா ஏசான் ரக்யாட் எனும் இந்த மலிவு விற்பனை டத்தாரான் நியாகா, கம்போங் கெசிர் தெங்கா (உலு பெர்ணம் சட்டமன்றம்), பார்க்கிங் பகுதி, பாடாங் எம்பிஏஜே (பாண்டன் இண்டா சட்டமன்றம்), சூராவ் அல்-இஸ்லாமியா, 88 லோரோங் பெர்மாய் 1A (தெராத்தாய் சட்டமன்றம்) மற்றும் சூராவ் அல்- அஸ்மா மைதானத்தில், தாமான் ஸ்ரீ ஜெலோக் (காஜாங் சட்டமன்றம்) ஆகிய இடங்களில் நடைபெற்றது.

சூராவ் ரிம்பா ஜெயாவின் மைதானம் (பத்து திகா சட்டமன்றம்), தெலோக் பங்லிமா காராங் பாலாய் பெங்குலு (சிஜாங்காங் சட்டமன்றம்), ஒராங் அஸ்லி கிராம மண்டபம், கம்போங் புக்கிட் பாங்கோங் (தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றம்) மற்றும் கம்போங் லபோஹான் டகாங் (டிங்கில் சட்டமன்றம்) ஆகிய இடங்களிலும் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும்,  பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மற்றும் செலாயாங் மீன் ஒரு  பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5  கிலோ போத்தல் சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி  10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது.

ஜெலாஜா ஏசான் ரக்யாட் இருப்பிடம் பற்றிய தகவலை https://linktr.ee/myPKPS இணைப்பைப்
பார்வையிடுவதன் மூலமும் பெறலாம்.

Pengarang :