ECONOMYSELANGOR

சம்பள நிலுவை மற்றும் இபிஎப் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் 100 முன்னாள் ஊழியர்களுக்கு உதவ மாநில சட்டமன்றம் முயற்சிக்கிறது

ஷா ஆலம், அக் 17: புக்கிட் லஞ்சன் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங், இங்கு அருகில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 100 முன்னாள் ஊழியர்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற உதவுகிறார்.

அவரது கூற்றுப்படி, தொழிலாளர்களை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் சிலாங்கூர் ஊழியர் அதிகாரமளிக்கும் நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படுத்தி  இவ்வியக்கங்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்கிறார் என செய்தி கசிந்துள்ளது.

இதற்கிடையில், ஊழியர் பிரதிநிதியான டீ சியான் முதலாளியிடம் எட்டு மாத சம்பள நிலுவைகள், ஊழியர்களின் சேம நிதி சந்தா போன்றவைகள் சேர்ந்து மொத்தம் RM1.2 கோடிக்கான நஷ்ட ஈடுகள் கோருகின்றனர்.

ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், புதிய தொழில் தொடங்கும் முன்னாள் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

“நிறுவனம் சுமார் எட்டு மாதங்களாக எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, எங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட இபிஎப் சந்தாவையும் செலுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் உண்மையில் ஏப்ரல் 2021 முதல் பணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்ற வதந்தியும் இப்பொழுது பரவி வருகிறது.

“மனிதவளத்துறை மற்றும் தொழிலாளர் ஊதியம் தொடர்பான துறைகளிடம் எங்கள் பிரச்சனைகளை முன்வைத்துள்ளோம். இது தொடர்பாக நாங்கள் 30 போலீஸ் புகார்களையும் செய்துள்ளோம். நாங்கள் எங்கள் உரிமைகளை பெற போராடி வருகிறோம்,” என்று அவர் விளக்கினார்.

சனிக்கிழமை அன்று, சுமார் 10 முன்னாள் ஊழியர்கள் அந்நிறுவனத்தின் வளாகத்தின் முன் அமைதியான முறையில் ஒன்றுகூடி, தங்களின் சம்பள நிலுவையை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.


Pengarang :