ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, சிலாங்கூரில் குறைந்துள்ளது

கோலாலம்பூர், நவ 15: ஜோகூர், மலாக்கா, கிளந்தான் மற்றும் பேராக் ஆகிய நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு அதிகரித்துள்ள நிலையில், சிலாங்கூரில் குறைந்துள்ளது.

எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் அடைக்கலம் பெற்ற தேசிய பள்ளி (SK) லஹர் யோய் (பிபிஎஸ்) நேற்று முழுமையாக மூடப்பட்டது. பினாங்கில் அதன் இறுதி தற்காலிக முகாம் மூடப்பட்டது, அம்மாநிலம் வெள்ள நிலைமையில் மீட்சி அடைவதை காட்டுகிறது. 

ஜோகூரில், மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு அறிக்கை ஒன்றில், செகாமட், குளுவாங், பொந்தியன் மற்றும் தங்காக் மாவட்டங்களில் ஆறு பிபிஎஸ் திறக்கப் பட்டுள்ளது,  திடீர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மாலை 4 மணிக்கு 318 பேராக அதிகரித்துள்ளது

பத்து பகாட், ஜோகூர் பாரு மற்றும் பொந்தியன் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது

மலாக்காவில், அலோர்காஜாவில் இரண்டு பிபிஎஸ்களில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவரகளுக்கு திறக்கப்பட்டுள்ளது. அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் அறிக்கை  வெளியிட்டுள்ளது.

கிளந்தான், பாசீர் மாஸ் மாவட்டத்தில் 713 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,124 பேர் எட்டு பிபிஎஸ்ஸில் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருவதாக சமூக நலத் துறையின் (ஜேகேஎம்) பேரிடர் தகவல் போர்டல் காட்டுகிறது

https://publicinfobanjir.water.gov.my/ என்ற அறிக்கையின்படி, பாசிர் மாஸ் ரந்தாவ் பஞ்ஜாங்கில் உள்ள நதியின்  வெள்ள அளவீடு 9.34 மீட்டராக எச்சரிக்கை அளவைத் தாண்டி உள்ளது.

பேராக்கில், இரவு 9 மணி நிலவரப்படி, ஆறு பிபிஎஸ்ஸில் 254 பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

சிலாங்கூரில், ஜேகேஎம் இன் InfoBencana இணையதளத்தின் அடிப்படையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 36 குடும்பங்களைச் சேர்ந்த 126 பேராக குறைந்துள்ளது.

இன்று காலை ஆறு மணி   வரை இன்னும்  மூன்று பிபிஎஸ்  இயங்குகிறது, அதாவது எஸ்கே சுங்கை சிரேஹ், ஜெராம் தேசிய மேல்நிலைப் பள்ளி மற்றும்  பாத்தாங் பெர்சுந்தாய்  யொக் சீ  சீன தேசிய வகை பள்ளி ஆகும்.


Pengarang :