ECONOMYMEDIA STATEMENTNATIONAL

15வது பொதுத் தேர்தல் தொடர்பில் நாடு முழுவதும் 3,417 புகார்கள்- காவல் துறை தகவல்

கோலாலம்பூர், நவ 21- இம்மாதம் 4ஆம் தேதி தொடங்கி நேற்று வரையிலான காலக்கட்டத்தில் பதினைந்தாவது பொதுத் தேர்தல் தொடர்பான 3,417 புகார்களை காவல் துறையினர் பெற்றுள்ளனர்.

அக்காலக்கட்டத்தில் கெடா மாநிலத்தில் மிக அதிகமாக அதாவது 447 புகார்கள் கிடைக்கப் பெற்ற வேளையில் அதற்கு அடுத்த நிலையில் சிலாங்கூர் (433 புகார்கள்), பகாங் (433 புகார்கள்), கிளந்தான் (429 புகார்கள்), பேராக் (334 புகார்கள்), ஜொகூர் (229 புகார்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளதாக அரச மலேசிய போலீஸ் படையின் 15வது பொதுத் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.

இவை தவிர்த்து நெகிரி செம்பிலான் மற்றும் கோலாலம்பூரில் தலா 218 புகர்களும், பெர்லிசில் 210 புகார்களும் சரவாவில் 87 புகார்களும் பினாங்கில் 83 புகார்களும் திரங்கானுவில் 61 புகார்களும் மலாக்காவில் 39 புகார்களும் கிடைக்கப் பெற்றன என்றார் அவர்.

இப்புகார்கள் தொடர்பில் 508 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு 149 அறிக்கைகள்  துணை சட்டத் துறை தலைவர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. இது தவிர, அறுவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு நால்வருக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது என்று அவர்  மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, கெடாவில் கடந்த 19ஆம் தேதியிடப்பட்ட ஏழு விசாரண அறிக்கைகள் திறக்கப்பட்டு ஒரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குநருமான அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :