ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா முதல் வாசிப்புக்கு சட்டமன்றத்தில் இன்று தாக்கல்

ஷா ஆலம், நவ 23– கட்சித் தாவும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தண்டிப்பதற்கு வகை செய்வதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சிலாங்கூர் அரசின் மாநில அரசியலமைப்புச் சட்டம் (திருத்தம்) 2022 முதல் வாசிப்புக்காக சட்டமன்றத்தில்  மந்திரி புசார் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

சிலாங்கூர் அரசியலமைப்புச் சட்டத்தின் 64வது ஷரத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் மாநில சட்ட ஆலோசகரிடமிருந்து தாங்கள் ஆலோசனையைப் பெற்றுள்ளதாக சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரான அவர் சொன்னார்.

மாநிலம் அல்லது நாட்டின் நலனுக்கு மேலாக தங்கள் சொந்த நலன்களை முன்னிறுத்துவதற்கு எந்தவொரு தரப்பு அல்லது தனிநபர்களுக்கு வாய்ப்பளிக்கப் படாமலிருப்பதை இந்த சட்டத் திருத்தம் உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.

மாநில அரசு நிர்வாகம் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய இந்த சட்டத் திருத்தத்திற்கு மாநில சட்டமன்றத்தின் ஒப்புதல் தேவை.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில அரசு சட்ட ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்றுள்ளது.  அரசியலமைப்புச் சட்டத்தின் 64வது ஷரத்தின் திருத்தம்  சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப் பட வேண்டும் என்று மாநில சட்ட ஆலோசகர் கூறியுள்ளார் என்று அமிருடின் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தாவுவதை தடுப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் எதிரொலியாக மாநில அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :