ECONOMYPBT

கட்டாய முகக்கவரி உத்தரவு- பெட்டாலிங் ஜெயா உணவகப் பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜன 12- இம்மாதம் முதல் தேதி அமலுக்கு வந்த கட்டமாய முகக்கவரி உத்தரவை பெட்டாலிங் ஜெயா வட்டாரத்திலுள்ள பெரும்பாலான அங்காடி மற்றும் உணவக நடத்துநர்கள் முறையாக பின்பற்றி நடக்கின்றனர்.

இந்த விதி முறை பின்பற்றல் தொடர்பில் அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லாவிட்டாலும் தாம் வருகை மேற்கொண்ட பல உணவகங்களில் அதன் பணியாளர்கள் முகக் கவரி அணிந்திருப்பதைக் கண்டதாக டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர் கூறினார்.

சீனப்புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள தாமான் செந்தோசாவில் வசதி குறைந்த 60 குடும்பங்களுக்கு தலா 250 வெள்ளி உதவித் தொகையை வழங்கியப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் பணியாளர்கள் முகக் கவரி அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை ஜனவரி முதல் தேதி அமலுக்கு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருன் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

உணவு தயாரிப்பு மற்றும் பரிமாறும் நடைமுறை மீது பொது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை அமல்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :