ECONOMYTOURISM

சுற்றுலா பஸ் நடத்துநர்கள் சுற்றுலா வழிகாட்டியைக் கொண்டிருக்க வேண்டும்- அமைச்சு வலியுறுத்து

மலாக்கா, ஜன 12- சுற்றுலா பஸ் நடத்துநர்கள் எப்போதும் பதிவு பெற்ற சுற்றுலா வழிகாட்டியின் சேவையைப் பெற்றிருக்க வேண்டும என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறியவர்கள் மீது சுற்றுலாத் தொழில் துறைச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சின் மலாக்கா மாநில இயக்குநர் ஜேய் இயோ கூறினார்.

சுற்றுலா பஸ் நடத்துநர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சாலை போக்குவரத்து இலாகாவுடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

அச்சோதனையின் போது மலாக்கா மாநிலத்தில் நுழைந்த 20 சுற்றுலா பஸ்கள் சோதனையிடப்பட்டன. அவற்றில் சுற்றுலா வழிகாட்டியைக் கொண்டிராத ஐந்து பஸ்களுக்கு தலா 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள இம்பிரியல் ஹெரிடோஸ் தங்கும் விடுதியில் நோன்பு மாத உணவு மெனுவை தொடக்கி  வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

மலாக்காவில் பதிவு பெற்ற 170 சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளதாகக் கூறிய இயோ, சுற்றுலா பேருந்து நடத்துநர்கள் அவர்களின் சேவையைப்ய பயன்படுத்துவது அவசியமாகும் என்றார்.

 


Pengarang :