NATIONAL

அடுத்தாண்டு ஜனவரியில் பள்ளியைத் தொடங்க கல்வியமைச்சு இணக்கம்

ஷா ஆலம், மார்ச் 29- பல்வேறு தரப்பினரிடமிருந்து குறிப்பாகப்
பெற்றோர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்றப் பின்னர் பள்ளித்
தவணையை மறுபடியும் ஜனவரி மாதத்திற்கு மாற்ற கல்வியமைச்சு
கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.

எனினும், 1996ஆம் ஆண்டு கல்விச் சட்டத்திற்கேற்ப பல்வேறு
அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதால் இதன் தொடர்பில் விரைந்து
முடிவெடுக்க இயலாது என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக்
கூறினார்.

அனைத்துப் பாடங்களும் அட்டவணைக்கேற்ப முடிக்கப்பட வேண்டும். அது
தவிர எஸ்.பி.எம். போன்ற முதன்மைத் தேர்வுகளுக்கு இடையூறு
ஏற்படாமலிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், பள்ளித் தவணையை ஜனவரிக்கு மாற்றுவதற்கு முன்னர்
நிச்சயமற்ற வானிலை மற்றும் வட்டார பொருளாதார நிலை
போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.

இவ்விவகாரத்தில் நாம் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள
வேண்டியுள்ளது. ஓராண்டில் 190க்கும் குறையாத நாட்கள் வகுப்புகள்
நடைபெற வேண்டும் என்ற நிபந்தனையும் அதில் ஒன்றாகும் என அவர்
மேலும் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் அமல் செய்யப்பட்ட நடமாட்டக்
கட்டுப்பாட்டு ஆணை காரணமாக 2022/2023ஆம் ஆண்டிற்கான பள்ளித்
தவணை மார்ச் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.


Pengarang :