ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

இன்று மாலை 6 மணி வரை சிப்பாங்கில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 13: சிலாங்கூரில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

புலனத்தில் (Facebook) ஒரு அறிக்கை மூலம், பெர்லிஸ், கெடா (குபாங் பாசு, கோத்தா ஸ்ட்டார், யான், கோலா மூடா, கூலிம் மற்றும் பண்டார் பாரு) மற்றும் பினாங்கு (செபராங் பிரை உத்தாரா, செபராங் பிரை தெங்கா மற்றும் செபராங் பிராய் சிலாத்தான்) ஆகிய இடங்களுக்கான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.

மேலும்  மலாக்கா, பேராக் (கிரியன் மற்றும் லாரூட், மாத்தங் மற்றும் செலாமா), நெகிரி செம்பிலான் (சிரம்பான், போர்ட் டிக்சன் மற்றும் ரெம்பாவ்) மற்றும் ஜோகூர் (குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு) ஆகியவற்றைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/மணி) என அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன, இது உடனடி அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.

பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :