ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

சித்தம் ஏற்பாட்டில் தெராத்தாய் தொகுதியில் நடைபெற்ற முக ஒப்பனைப் பயிற்சியில் 30 பேர் பங்கேற்பு

அம்பாங், மே 26- "சித்தம்" எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மையத்தின் ஏற்பாட்டில்  முக ஒப்பனை பயிற்சிப் பட்டறை  தாமான் புத்ரா அம்பாங் சமூக மண்டபத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெராத்தாய் சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் ராஜேந்திரன் ராசப்பனின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறையில் 30 மகளிர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

முக ஒப்பனை செய்வது தொடர்பான நுணுக்கங்களை இத்துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவரும் மேரி கேய் நிறுவனத்தின் மலேசிய,சிங்கப்பூர் விற்பனை மற்றும் சந்தை நிர்வாகியுமான சுலோச்சனாவதி பங்கேற்பாளர்களுக்கு கற்றுத் தந்தார்.

மேலும், சிறிய அளவில் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுவதற்கான வியபார அணுகு முறைகளையும் பங்கேற்பாளர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். இந்தப் பயிற்சிப் பட்டறை தங்களுக்கு பெரிதும் பயனமிக்கதாக விளங்கியதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்த சித்தம் அமைப்பின் வாயிலாக மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது.

இந்த பயிற்சியை தெராத்தாய் தொகுதியில் நடத்துவதற்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கிய சித்தம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ராஜேந்திரன் கூறினார்.

Pengarang :