ACTIVITIES AND ADSECONOMY

தாவாஸ் TAWAS உறுப்பினர்களின்  20 441 பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை  உதவிக்காக RM1.28 மில்லியன்

ஷா ஆலம், ஜூன் 16: 2016 ஆம் ஆண்டு பிறந்த சிலாங்கூர்  வாரிசான் (தவாஸ்) குழந்தைகள்  மொத்தம் 20,441 பேர் இதுவரை கல்விக்கான உதவியைப் பெற்றுள்ளனர்..

இப்போது  RM50 மதிப்புள்ள பள்ளிப் பைகளை நன்கொடையாக வழங்குவது முதல் வகுப்பில் நுழையும் குழந்தைகளை உற்சாகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என யயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூரின் (YAWAS) கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் உதவி மேலாளர்  கூறினார்.

“SiManja TAWAS உறுப்பினர்களுக்கான பள்ளி நுழைவு உதவித் திட்டத்தை வெற்றிகரமாக்க YAWAS அமைப்புக்கு மொத்தம் RM1.28 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

“இந்த  உதவித் திட்டம் முன்பு  மாநில சட்டமன்ற (DUN) அலுவலகம் வழி வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது YAWAS அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது ” என்று ஷாரிசான் முகமட் ஷெரீஃப் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதுவரை இப்புத்தக பைகளை  எடுக்காத சுமார் 5,000 உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்கள் ஷா ஆலம் பிரிவு 7 இல் உள்ள டேவான் ராஜா மூட மூசாவில்,  அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

“இன்னும் உரிமை கோரப்படாத பைகள் அதிகமாக உள்ளன, எனவே மே 22 முதல் ஜூன் 22 வரை பெற்றோர்கள் அவற்றை எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பை நாங்கள் மீண்டும் திறக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, மாநிலம் முழுவதும் 44,484 தவாஸ் உறுப்பினர்கள் இந்த ஆண்டு பள்ளிக் கல்வி உதவியைப் பெறுவதாக டத்தோ மந்திரி புசார் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தங்கள் குழந்தைகளின் பள்ளிக்கு அனுப்ப தயாராகும் குடும்பங்களின்  பொருளாதார சுமையை குறைக்க இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :