ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளை தீர்த்து, நாட்டை சரியான இலக்குக்கு கொண்டு வர குறைந்த, கால அவகாசமே உண்டு

கோலாலம்பூர், ஜூன் 17: நாடு எதிர்கொள்ளும் சவால்களை கையாள பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்சனைகளை தீர்த்து, நாட்டை சரியான பாதையில் கொண்டு வர மலேசியாவுக்கு குறைந்த, கால அவகாசமே உண்டு என்று பிரதமர் கூறினார்.

பொருளாதார வல்லுநர்களுடன் நாட்டின் பொருளாதாரத்தின் இலக்கு குறித்து வெள்ளிக்கிழமை மாலை விவாதித்த பின்னர், இந்த விஷயத்தை ஒப்புக்கொண்டதாக நிதி அமைச்சராகவும் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, எந்த ஒரு சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள இது மக்களுக்கும் நாட்டின் நலனுக்கும் உகந்தவையாக இருக்க வேண்டும்.  அந்த  சீர்திருத்தை மேற்கொள்ள  நமக்கு கடுமையான  உழைப்பு, ஒழுக்கம், பொறுமை, நம்பிக்கை மற்றும் தைரியம் தேவை.

” இவ்விவகாரத்தில்  இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்க கடுமையாக உழைக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது எண்களால் மட்டும் நிர்ணயிக்கப்படுவது அல்ல, மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களையும் அது பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று அவர் நேற்று பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.

பொருளாதார நிபுணர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முன்னாள் நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ ஜோஹாரி கானி மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேசிய பல்கலைக்கழகத்தின் (MIND-UKM) பேராசிரியர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் அஸ்லான் கசாலி. கருவூலத் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன், பொருளாதார அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன், மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆப் எகனாமிக் ரிசர்ச் (MIER) தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள், மலேசியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் அண்ட் இன்க்ளூசிவ் டெவலப்மென்ட்டின் இயக்குநர் டாக்டர் நுங்சாரி அகமது ராதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் குறித்து அன்வார் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி இது என்றார்.

புதிய வளர்ச்சிப் பகுதிகள் மற்றும் முதலீட்டுச் சூழலை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். “நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் மடாணி பொருளாதாரத்தை  உருவாக்க, நாட்டின்  குறுகிய கால, நீண்ட கால பொருளாதார  இலக்கை வடிவமைக்க பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும்  நிச்சயமாக பயன்படுத்தப்படும்  என்று அவர் கூறினார்.


Pengarang :