ACTIVITIES AND ADSPBTSUKANKINI

சுபாங் ஜெயா USJ 2/4 திடலை மேம்படுத்த சட்டமன்றம்  RM91,900 செலவிட்டது.

சுபாங் ஜெயா, 17 ஜூன்: மக்களை நேசிக்கும் சிலாங்கூர் திட்டத்தின் (PSP) கீழ் USJ 2/4 கால்பந்து மைதானத்தை மேம்படுத்த சுபாங் ஜெயா மாநில சட்டமன்றம் (DUN) RM91,900 செலவிட்டது.

சட்டமன்ற உறுப்பினர் மிஷேல் இங்  Michelle Ng Mei Sze, அந்த கால்பந்து மைதானம் கால்பந்துடன் கூடுதலாக ரக்பி மற்றும் வட்டு எறிதல் (frisbee) ஆகியவற்றிற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

“நாங்கள் ஒரு மைதானத்தை  சில நோக்கங்களுடன் உருவாக்குவோம், அவை ஒவ்வொன்றும் அந்தந்த விளையாட்டு  தேவைகளைப் பிரதிபலிக்கும்.  ஆனால் இது, “கால்பந்து, ரக்பி மற்றும் ஃபிரிஸ்பீ ஆகிய மூன்று விளையாட்டுகள்  நடத்த பயன்படுத்த வசதியாக  இருக்கும், இந்தக் களத்தில் காவலர்கள் இருப்பார்கள்,” என்றார்.

முன்னதாக சட்ட மன்ற உறுப்பினர் சுபாங் ஜெயா மாநகர கவுன்சிலர் அர் கமருக் ஹிஷாம் இயோப் ஹாஷிம் அவர்களுடன் இன்று களத்தின் மேம்படுத்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக இடத்திற்குச் சென்றார்.

மே 29ம் தேதி துவங்கிய திட்டம், ஜூலை 24ம் தேதி  முழுவதுமாக முடிக்கப்படும்.  மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க, திடலை சுற்றிலும் நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படும்.

இதற்கிடையில், இது போன்ற ஒரு திட்டம், குடியிருப்பாளர்களின்  தேவைகளில்  மாநில அரசின் அக்கறையை நிரூபிப்பதாக வும், மாநில அரசு பொதுமக்களின் வசதிகளுக்கும் , தேவைகளுக்கும் எப்பொழுதும்  முன்னுரிமை அளிப்பதை  இது காட்டுவதாக  Ar Kamaruk கூறினார்.

புல்லின் தரத்தை பராமரிக்கும் வகையில், மழை பெய்யும் போது, திடலின் நிலை எப்போதும் சிறப்பாக இருக்கும் வகையில், தற்காலிகமாக அதனை  மூடுவோம்,” என்றார்.

2023 பட்ஜெட் மூலம், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, உள்ளூர் மக்களின் நலனுக்காக சிறிய திட்டங்களை வழங்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சியாக சிலாங்கூர் பென்யாயாங் திட்ட முயற்சியின் கீழ் மொத்தம் RM28 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அறிவித்தார்.


Pengarang :