ECONOMYEKSKLUSIFMEDIA STATEMENTSI

கோலசிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் சிவப்பு மஞ்சள் ஆரூஸ் வேட்பாளருக்கு வாக்கு வேட்டை. சிலாங்கூர் மந்திரி புசார்

செய்தி- மா. சிவகுமார்

கோல சிலாங்கூர் பெர்மாத்தாங் ஜூலை  5;-   கோல சிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியின் பாக்காத்தான் ஹரப்பான் எண் : 09 பெர்மாத்தாங்  சட்டமன்ற தொகுதியின்  வேட்பாளர் முகமட் யாஹ்யா மட்ஷாரிக்கு  ஆதரவாக நேற்று இரவு பெர்மாத்தாங் கில் உரை நிகழ்த்திய  சிலாங்கூர்  மந்திரி புசார் டத்தோ  ஸ்ரீ அமிருடன் பின் ஷாரி சிலாங்கூரின் சாதனைகளை எடுத்து  முன் வைத்ததுடன், ஒற்றுமையான நம்பிக்கையான ஒரு நிலையான ஆட்சியே  மாநிலத்தின் வெற்றிக்கு மூலக்காரணம் என்றார்

ஹரப்பான் வேட்பாளர் யாஹ்யா சாரிக்கு ஆதரவு  பிரச்சாரத்தில் சிலாங்கூர் அரசாங்கம் கடந்த 5 – வருடமாக  89,000 -வேலை வாய்ப்புகளை மாநில மக்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.  நாட்டின்  பொருளாதார வளர்ச்சிக்கு சிலாங்கூர் முக்கிய பங்களித்து  வருகிறது என்பதும் உங்களுக்கு தெரியும்.

அதே சமயம் மலேசிய அரசியலில் புதிய வடிவமைப்பு உருவாக   உள்ளது. அதுதான் மடாணி ஒற்றுமை அரசாங்கம்  என்றார்.  இத் திட்டம் மக்களின் ஒருமைப்பாட்டிற்கு உருவாக்கப்பட்டது மட்டுமின்றி  மக்களின் பொருளாதார சுமைகளை குறைப்பதும் ஏழ்மைக்கு விரைவில் தீர்வு காண்பதே முக்கிய இலக்கு என்றார்

இன்றைய மடாணி ஒற்றுமை அரசாங்கம், அரசாங்கத்தில்   வேலை செய்யும் ஊழியர்கள் மட்டுமின்றி  மக்களுக்கும் பல சௌகரியங்களை வழங்கி வருகிறது. அவை பெருநாள் ஊக்க தொகையும் தந்துள்ளது. மக்களின் அடிப்படை ஊதிய உயர்வை வலியுறுத்தி வருவதுடன், முக்கிய உணவு பொருட்கள் சலுகை விலையில் கிடைப்பதை உறுதி செய்ய ரஹ்மா திட்டத்தினை அமல் படுத்தி வருகிறது.

சிலாங்கூர் அரசாங்கமும் பல மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் சேவையாற்றி வருகிறது. கோவிட் -19 -காலக்கட்டத்திலும் தடுப்பூசி, சோதனை கருவிகள் வாங்குவதற்கு, பாதுகாப்பு கவசங்கள் இன்னும் பல சுகாதார திட்டங்களின் வழி மக்கள் உடல் நலனுக்கு  உதவி வருகிறது.

 அது மட்டும் அல்லாமல் சிலாங்கூர் மக்களின் தேவைக்காக 46 –  மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது முக்கியமாக மக்களின் கல்வி  உதவித்திட்டங்கள், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு தொகை வழங்குவது. மாநில அரசின் ஏசான்  ரஹ்மா திட்டத்தின் வழி உணவு பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
பிங்காஸ் என்ற சிறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உணவுக்கு கூட சிரமப்படும் தாய்மார்களுக்கு உதவும் திட்டம்  என பல திட்டங்களை கடந்த 5 – வருடங்களில் சிலாங்கூர் அரசாங்கம்  வெற்றிகரமாக மக்களுக்கு அமல்படுத்தி வருவதாக மந்திரி புசார் அவர் உரையில் கூறினார்.

மேலும் இந்த பகுதி மேம்பாட்டுக்கு பல திட்டங்களை சிலாங்கூர் RS 1 வழி மேற்கொள்ளவுள்ளது. அதில் முக்கியமாக ஜஜரன்  கித்தா சிலாங்கூர் திட்டத்தின் வழி   2026 -ஆம் ஆண்டில் கிள்ளானை சபாக் பெர்ணமுடன் இணைக்கும்  ரயில் பாதை திட்டமும் உள்ளது என்றார் அவர்.

அது நிறைவேறினால் தஞ்சோங் காராங் அல்லது கோலசிலாங்கூர் நில மதிப்பு அதிகரிக்கும்.இது நம் நாட்டின் பொருளாதார மதிப்பை அதிகரிக்க செய்யும் என்று பெர்மாத்தாங் தொகுதிக்கு நேற்று சிறப்பு வருகை புரிந்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அமிருடின் பின் ஷாரி  கூறினார்.

நிறைவாக பாக்காத்தான் ஹரப்பான் பெர்மாத்தாங் வேட்பாளர் முகமட் யாஹ்யா மட்சாரிக்கு உங்களின் வாக்குகளை போட்டு அவரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Pengarang :