ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பூலாய், சிம்பாங் ரெங்கம் தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி- அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர், செப் 10- பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாட் மற்றும் நஸ்ரி அப்துல் ரஹ்மானுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் வழி பூலாய் நாடாளுமன்றத் தொகுதியையும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியையும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பக்கத்தான் கூட்டணிக்கு வாக்களித்த மற்றும் நாட்டை மேம்படுத்தும் ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகள் மீது நம்பிக்கை வைத்த அனைத்து வாக்காளர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பக்கத்தான் ஹராப்பான் தலைவருமான அவர் அன்வார் சொன்னார்.

மேம்பாட்டையும் மக்களின் பொருளாதாரத்தையும் தொடர்ந்து முன்னோக்கி கொண்டுச் செல்லும் ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள நேர்மறையான முன்னேற்றமாகும் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏழாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட சுஹைஸான் 18,641 வாக்குகள் பெரும்பான்மையில் பூலாய் நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றினார். பாரிசான் நேஷனல்- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஒற்றுமை அரசாங்கம் உருவான பிறகு வெற்றி பெற்ற முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக சுஹைஸான் விளங்குகிறார்.

இதனிடையே சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் நஸ்ரி 3,514 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.


Pengarang :