ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBT

ஷா ஆலமில் வெ.4 கோடி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்

ஷா ஆலம், டிச, 23- ஷா ஆலம் வட்டாரத்தில் 4 கோடியே 10 லட்சம்
வெள்ளி செலவில் நான்கு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை ஷா ஆலம்
மாநகர் மன்றம் மேற்கொண்டு வருகிறது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் கீழ் வடிகால்கள்,
கால்வாய்கள், நீர் இறைப்பு பம்ப் நிலையங்கள் மற்றும் நீர் சேகரிப்பு
குளங்களை சீரமைப்பது மற்றும் புதிதாக நிர்மாணிப்பது போன்றப் பணிகள்
கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுவதாக மாநகர் மன்றத்தின் இடைக்கால
டத்தோ பண்டார் செரேமி தர்மான் கூறினார்.
இத்திட்டங்கள் யாவும் அடிக்கடி வெள்ளம் ஏற்படக்கூடிய செக்சன் 13,
தாமான் ஸ்ரீ மூடா, செக்சன் யு1, செக்சன் 7 ஆகிய பகுதிகளில்
மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
இந்த திட்டங்கள் அனைத்தும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கட்டங்
கட்டமாக மேற்கொள்ளப் படுகின்றன. இந்த குத்தகைகளுக்கான
டெண்டர்கள் திறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்கள்
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும்
வேளையில் அத்திட்ட ஆலோசக நிலையிலான ஆய்வுகள் வரும் 2025
தொடக்கம் வரை நடைபெறும் என்றார் அவர்.
நேற்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. தலைமையகத்தில் நடைபெற்ற ஷா
ஆலம் மாநகர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமையேற்றப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இவ்வட்டாரத்தில் வெள்ளம் தொடர்பான 24 மணி நேர பராமரிப்பு மற்றும்
கண்காணிப்பு பணிகளை ஷா ஆலம் கண்காணிப்பு முறையின்
ஒருங்கிணைந்த ஆணை மையத் தரப்பினர் (ஐரிஸ்) மேற்கொள்வர்
என்பதோடு ஷா ஆலம் வட்டாரத்தில் வெள்ளம் ஏற்படும் பட்சத்தில்
விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக செயல்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது
என்று அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலம் வட்டாரத்தில் வெள்ளப் பிரச்சனை மீண்டும் எழாதிருப்பதை
உறுதி செய்வதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை
ஷா ஆலம் வெள்ள நடவடிக்கை பெருந்திட்டத்தை (சுசுட்) மாநகர் மன்றம்
கடந்தாண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது.

Pengarang :