செய்தி ; சு.சுப்பையா
கோத்தா டமன்சாரா மார்ச்.3- தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைச்சின் கீழ் 2024 ஆண்டுக்கு 6.5 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மடாணி அரசின் சிலாங்கூர் மாநில அளவிலான தெக்கூன் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றிய போது அதன் துணை அமைச்சர் டத்தோ ரமணன் தெரிவித்தார்.
இந்த 6.5 கோடி ரிங்கிட் 4000 தொழில் முனைவோர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் 7.35 மில்லியன் ரிங்கிட் சிலாங்கூர் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கோத்த டமன்சாரா (STRAND Mall ) ஸ்டிரன் பேரங்காடியில் நடைபெற்ற தெக்கூன் விழாவில் தெரிவித்தார்.
சிலாங்கூர் உள்ள தொழில் முனைவோர்கள் சொந்த தொழிலில் ஈடுபட முன்பணமாக தெக்கூன் கடன் உதவி மடாணி அரசால் வழங்கப்பட்டது. இந்த மடாணி தெக்கூன் விழா நேற்று, இன்று, நாளையும் 3 நாட்களுக்கு கோத்தா டமன்சாராவில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் தெக்கூன் கடனுதவி, எஸ்.எம்.வி கடன் உதவி போன்ற கடன் உதவிகளுக்கான விளக்கம் கொடுக்கப்படுகின்றன. அதே வேளையில் சேமநிதி வாரியம், சொக்சோ குறித்தும் பொது மக்களுக்கு விளக்கம் கொடுக்க முகப்பு சேவைகள் திறக்கப ்பட்டுள்ளன.
இதே போல் தெக்கூன் கடன் உதவி பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களும் தங்கள் பொருட்களை இங்கு விற்கின்றன. ரஹ்மாவும் தனது விற்பனை கடையை 3 நாட்களுக்கு திறந்துள்ளன.
இந்த தெக்கூன் விழாவை ஒரு வியாபார வாய்ப்பாக தெக்கூன் கடனுதவி பெற்று தொடங்கிய தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் வெற்றி பெற்ற 10 தொழில் முனைவோர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
தெக்கூன் கடன் உதவித் திட்டம் 1998 ஆம் ஆண்டு முதல் செயல் படுகிறது. இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் மொத்தம் 573,348 பேருக்கு ரிங்கிட் மலேசியா 915 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலாங்கூர் மாநில தொழில் முனைவோர்களுக்கு மட்டும் ரி.ம. 127 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெக்கூன் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல்லா சானி, கோத்த டமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் துவான் இசூவான் காசிம், டத்தோ அன்புமணி, பினாங்கு சட்ட மன்ற் உறுப்பினர் துவான் குமரேசன் மற்றும் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.