ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் மாநில அளவில் கோத்த டமன்சாராவில் தெக்கூன் விழா

செய்தி ; சு. சுப்பையா

கோத்தா டமன்சாரா.மார்ச்.2-தொழில் முனைவோர், கூட்டுறவு அமைச்சின் சார்பில் சிலாங்கூர் மாநில அளவிலான தெக்கூன் விழா கோத்தா டமன்சாரா, ஸ்டிரன் மோலில் நடை பெறுகின்றது. இவ்விழா  இரவு 10.00 மணி வரை நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இவ்விழாவை அதிகாரப்பூர்வமாக  சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை, துணை அமைச்சர் டத்தோ ரமணன் அதிகாரப்பூர்வமாக உரையாற்றி தொடங்கி வைத்தார்.

தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து இலாகாக்கள்  சேவை முகப்பிடங்களை  மூன்று நாட்களுக்கு திறந்து வைத்துள்ளன. சொந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டும். தெக்கூன் வழங்கும் கடன் வசதி, எஸ்.எம்.இ. கடன் வசதி, சேமநிதி வாரியம் வழங்கும் கடன் வசதி என்று தொழில் முனைவோர் அமைச்சின் கீழ் இயங்கும் எல்லா இலாகாக்களும் பொது மக்களுக்கு விளக்கமளிக்க தயாராக இருக்கின்றனர்.

அமைச்சின் கீழ் கடன் பெற்று வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களும் தங்களது சேவையை இங்கு வழங்குகின்றனர். உணவு, மளிகை பொருட்கள், பள்ளி சீருடைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ரஹ்மா விற்பனை சந்தையும் 3 நாட்களுக்கு இங்கு நடைபெறுகின்றன. காலை 10.00 முதல் இரவு 10.00 மணி வரை இந்த தெக்கூன் விழா நடை பெறுகிறது.

டத்தோ ரமணன் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு அவரது தொகுதியில் நடைபெறும் முதல் மாநில அளவிலான விழாவாக இவ்விழா கருதப்படுகிறது. இவ்விழாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்கள் திரளாக வந்து கலந்துக் கொண்டு பயனடைய வேண்டும் என்று டத்தோ ரமணன் எதிர்பார்ப்பதாக அவரது தொகுதியின் இந்திய அதிகாரியான தமிழ்செல்வன் தெரிவித்தார்.


Pengarang :