SELANGOR

தொடக்கநிலை நிறுவனங்கள் RM1 மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்ட CXO கிளப் திட்டம் அறிமுகம்

கோலாலம்பூர், மார்ச் 27: தொடக்கநிலை நிறுவனங்கள் RM1 மில்லியனுக்கு மேல் வருமானம் ஈட்ட உதவும் CXO கிளப் திட்டத்தை சிலாங்கூர் டிஜிட்டல் பொருளாதார தகவல் தொழில்நுட்பக் கழகம் (Sidec) அறிமுகப்படுத்தியது.

இத்திட்டம் இம்மாதம் முதல் எதிர்வரும் அக்டோபர் வரை இயங்கும் என்றும், அதில் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைமை இயக்க அதிகாரிகள் உட்பட நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் 100 பேர் பங்கேற்கலாம் என்றும் முதலீட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

அவின் பேங்க் “Affin Bank“ நிதியுதவி செய்யும் இத்திட்டம் பங்கேற்பாளர்களை தைவான், ஜப்பான், லண்டன் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்குப் பொருட்களை சந்தைப்படுத்த அனுமதிக்கிறது என்று இங் ஸீ ஹான் விளக்கினார்.

“அனைத்து பங்கேற்பாளர்களுக்கு பொறுப்பான அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் திறமையான தொழில்முனைவோராக தொடர்ந்து வளர CXO கிளப் ஒரு தளமாக மாறுகிறது.

“இந்த திட்டமானது சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் வகை (35 சதவீதம்), இ-காமர்ஸ் மற்றும் தொழில்நுட்ப வணிகங்கள் (30 சதவீதம்) மற்றும் கார்ப்பரேட் (5 சதவீதம்) ஆகியவற்றின் பங்கேற்பை இலக்காகக் கொண்டுள்ளது,” என்று அவர் இன்று மெனாரா அஃபினில் கிளப்பைத் தொடங்கி வைத்த பின் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பெமெசுட் சிலாங்கூர் திட்டம் (SAP) உட்பட Sidec திட்டங்களில் முன்பு பங்கு பெற்ற நிறுவனங்கள் என்றும் அவர் கூறினார்.

“உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு RM3,000 ஆகும். இந்நிகழ்ச்சி முழுவதும், பங்கேற்பாளர்கள் அஃபின் டிஆர்எக்ஸ், ஏடபிள்யூஎஸ், மைக்ரோசாப்ட், செக்யூரிட்டீஸ் கமிஷன் மற்றும் அலிபாபா கிளவுட் ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்படும் தொழில்துறை பயணங்களில் பங்கேற்பார்கள்,” என்று அவர் தெரிவித்தார். .

இத்திட்டத்தின் மூலம் பங்கேற்பாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் வணிகத் தொடர்புகளை நிறுவுவதற்கும், சர்வதேசச் சந்தைகளுக்கான அணுகலை எளிதாக்குவதற்கும் மற்றும் உயர்தர கற்றல் அமர்வுகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.


Pengarang :