SELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஏப் 17: நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் மேலயு, சுபாங்கில் சுமார் 300 குடும்பங்களுக்குக் கோத்தா டாமன்சாரா தொகுதியின் சமூக சேவை மையம் பல்வேறு உதவிகளை வழங்குகிறது.

நேற்றும் இன்றும் 1,000 உணவுப் பேக்கட்டுகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் இசுவான் காசிம் தெரிவித்தார்.

“நேற்று இரவு முதல், நாங்கள் 1,000 இரவு உணவுப் பேக்கட்டுகளை விநியோகித்தோம். இன்று மேலும் 1,000 மதிய உணவுப் பேக்கட்டுகளை நாங்கள் தயார் செய்கிறோம். ஏனெனில், சில பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளத்தால் சிக்கித் தவிக்கக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்.

“கோத்தா டாமன்சாரா தொகுதியில் இதுவரை எந்த ஒரு தற்காலிக தங்கும் மையமும் திறக்கப்படவில்லை, மேலும் பல இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

தனது தரப்பு துப்புரவு பணிகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் ஐந்து மூலோபாய பகுதிகளில் ‘ரோல் ஆன் ரோல் ஆஃப்’ (ரோரோ) தொட்டி வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது என அவர் கூறினார்.

அப்பகுதிகள் லோரோங் ஹஜ்ஜா லிஜா, தாமான் செத்தியா வாரிசன், ஜாலான் மெர்பாவ், லோரோங் தெம்புசு மற்றும் லாட் 3435, கம்போங் மெலாயு சுபாங் ஆகியவை ஆகும்.

“KDEB கழிவு மேலாண்மை மற்றும் ஷா ஆலம் மாநகராட்சி மூலம்  வழங்கிய   ரோரோ தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியை எளிதாக்கும் வகையில்  தக்க  இடங்களில் வைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.


Pengarang :