NATIONAL

ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது விபத்துகள், மரண எண்ணிக்கை குறைந்தது

கோலாலம்பூர், ஏப் 18- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 8ஆம்
தேதி தொடங்கி ஆறு நாட்களுக்கு அரச மலேசிய போலீஸ் படை
அமல்படுத்திய 22வது ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின்
போது சாலை விபத்துகளின் எண்ணிக்கை வெற்றிகரமாகக்
குறைக்கப்பட்டது.

கடந்தாண்டு நடத்தப்பட்ட ஓப் செலாமாட் இயக்கத்தின் போது 8,989ஆக
இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 1.41 விழுக்காடு
குறைந்து 8,862 ஆக ஆனதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ
ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

இக்காலக் கட்டத்தில் மரண விபத்துகளின் எண்ணிக்கை 10 விழுக்காடு
குறைந்து 105 சம்பவங்களாகப் பதிவானது. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை
117ஆக இருந்தது. அதே சமயம் விபத்துகளில் மரணமடைந்தவர்கள்
எண்ணிக்கையும் 126லிருந்து இவ்வாண்டு 119 ஆக குறைந்தது என்று அவர்
சொன்னார்.

இங்குள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற 22வது ஓப்
செலாமாட் இயக்கத்தின் போது சிறப்பாகப் பங்காற்றிய மாநில மற்றும்
மாவட்ட போலீஸ் தலைமையகங்களுக்குப் பாராட்டு பத்திரம் வழங்கும்
நிகழ்வுக்கு வழங்கிய உரையில் அவர் இதனைக் கூறினார். அவரது
உரையை புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும்
அமலாக்கத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ முகமது நாசீர்
ஓமார் வாசித்தார்.

இந்த இயக்கத்தின் போது மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் அதில்
பயணம் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட மரணங்களே அதிகம் பதிவானதாக கூறிய அவர், இத்தகைய விபத்துகளில் கடந்தாண்டு 80 பேர் பலியான
வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 79ஆக குறைந்தது என்றார்.

சோர்வு மற்றும் போதிய உறக்கமின்மை காரணமாக வாகனங்களை
கடப்படுத்த தவறியது, வாகனங்களுக்கு இடையே போதுமான
இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியது ஆகியவை விபத்துக்கான
காரணங்களாக விளங்குவது ஆய்வில் தெரிய வந்துள்ளது என அவர்
குறிப்பிட்டார்.


Pengarang :