NATIONAL

கோல குபு பாரு தமிழ்ப் பள்ளிக்கு மேலும் வெ.20,000 மானியம்- துணைக் கல்வியமைச்சர் வாக்குறுதி

உலு சிலாங்கூர், ஏப் 18-  கோல குபு பாரு தமிழ்ப்பள்ளியின்  சீரமைப்பு பணிகளுக்கு  மேலும்  20,000 வெள்ளி  வழங்கப்படும் என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ அறிவித்துள்ளார்.

கோல குபு பாரு தமிழ்ப் பள்ளிக்கு நேற்று சிறப்பு வருகை புரிந்த போது  துணையமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கல்வியமைச்சு வழங்கிய மானியம் முறையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் தாமும் கல்வி அமைச்சும் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று ஆய்வு பேற்கொண்டு  வருவதாக அவர் கூறினார்

அந்த வகையில் இன்று கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளிக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பள்ளியின் மறு சீரமைப்பு பணிகளுக்குக் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 70,000 வெள்ளியை முறையாகப் பயன்படுத்திய பள்ளி நிர்வாகத்தை துணை கல்வியமைச்சர் வோங் கா வோ பெரிதும் பாராட்டினார்.

இந்த ஆண்டு 20,000 வெள்ளி வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பள்ளியின் கதவுகள், இதர சீரமைப்பு பணிகளுக்கு உதவ கூடுதலாக 20,000 வெள்ளியை ஒதுக்க முயற்சிகள்  முன்னெடுக்கப்படும் என்றார்.

முன்னதாக பள்ளிக்கு வருகை புரிந்த துணைக் கல்வி அமைச்சருக்கு பள்ளி நிர்வாகத்தினரும் மாணவர்களும் உற்சாக வரவேற்பை வழங்கினார்.

பள்ளிக்கு வருகை புரிந்து உதவிகளை வழங்க முன் வந்திருக்கும் துணைக் கல்வி அமைச்சருக்குப் பள்ளி நிர்வாக சார்பில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயமல்லிகா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் என நம்பிக்கை இணைய ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.


Pengarang :