Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari ketika menjawab soalan dalam sidang Dewan Negeri Selangor (DNS) di Bangunan Annex pada 26 Ogos 2021. Foto NAZIR KHAIRI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 மாநில இளம் சட்டமன்ற உறுப்பினர் 2024 நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 19: மே 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறும் சிலாங்கூர் மாநில இளம் சட்டமன்ற உறுப்பினர் (ADN) 2024 நிகழ்ச்சியில் பங்கேற்க மாநில அரசு இளைஞர்களை அழைக்கிறது.

இத்திட்டத்தில்  18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம், அதற்கான பதிவு திறக்கப்பட்டுள்ளது. QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் அல்லது dewan.selangor.gov.my இணையதளத்தை நாடுவதன் மூலமும் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்.

கடந்த மாதம், இளைஞர்களுக்கு மக்களின் பிரதிநிதியாக அனுபவத்தைப் பெற  இந்தத் திட்டம்  திறக்கப் பட்டது.  சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வு போன்ற விவகாரங்களை  பற்றி விவாதிக்கவும் வாய்ப்பளிப்பதாகச் சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.

சமூக ஜனநாயகமயமாக்கல் சங்கம் மற்றும் சிலாங்கூர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருடனான கூட்டுத் திட்டம், மாநில அளவில் சட்டங்களை உருவாக்கும் செயல் முறையைப் புரிந்து கொள்ள பங்கேற்பாளர்களுக்கு கற்பிக்கிறது என்று அவர் விளக்கினார்.

சட்டமன்ற அவை  கட்டிடத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியானது, அரசு சாரா நிறுவனங்கள், உள்ளூர் இளைஞர் ஆர்வலர்கள் மற்றும் பொது இயக்கங்களில்  உறுப்பினர்களாக இருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இது 2013 ஆம் ஆண்டு முதல் செயல் படுத்தப்பட்டு வரும் ஏடிஎன் மூட சிலாங்கூர் திட்டத்தின் அமைப்பு, குறிப்பாக மாநில அரசின் கொள்கைகளை பற்றி சிந்திக்கும் இளைஞர்களை உருவாக்க டிஎன்ஸ் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு சிறப்பு திட்டமாகும்.


Pengarang :