NATIONAL

பொது தற்காப்புப் படையின் தீவிர முயற்சியால் காரில் சிக்கிக் கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூர், ஏப் 23- இங்குள்ள புக்கிட் பிந்தாங்கில் காரில் சிக்கிக் கொண்ட இரண்டு வயது சிறுவனை மலேசிய பொது தற்காப்புப் படை (ஏ.பி.எம்.) உறுப்பினர்கள் பத்திரமாக மீட்டனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பொது தற்காப்புப் படையின் கோலாலம்பூர் பிரிவு நடவடிக்கை அதிகாரி லெப்டிண்ன்ட் ஷஹாருள் கமார் முகமது கூறினார்.

தன் மகனுக்கு பெம்பர்ஸ் மாற்றிய தென் கொரிய பிரஜையான தந்தை காரின் சாவி அச்சிறுவனின் கையில் இருப்பதை உணராமல் கதவை சாத்தி உள்ளார். அவ்வாடவர் தன் மனைவி மற்றும் மூத்த மகனுடன் வெளியில் இருக்க, காரின் கதவுகள் அனைத்தும் தானியங்கி முறையில் மூடிக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பைப் பெற் ஏ.பி.எம். உறுப்பினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு 8.55 மணியளவில் காரின் கதவுகளை வெற்றிகரமாகத் திறந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

தமது உறுப்பினர்கள் பத்தே நிமிடங்களில் காரின் கதவைத் திறந்து விட்டதாகக் கூறிய அவர், காரில் சிக்கிக் கொண்ட சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.


Pengarang :